எல்.ஐ.சி. முகவர்கள் காத்திருப்பு போராட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2021 2:10 AM IST (Updated: 24 March 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. முகவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் எல்.ஐ.சி. முகவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். எல்.ஐ.சி. முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், பாலிசிக்கான ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், ஆயுள்காப்பீட்டு வணிகத்தில் சேவை மற்றும் சரக்கு (ஜி.எஸ்.டி.) வரியை நீக்க வலியுறுத்தியும், எல்.ஐ.சி.யில் அந்நிய முதலீடு மற்றும் தனியார் மயமாக்கல் செய்வதை கைவிடக்கோரியும் புதுவணிகம் மற்றும் எல்.ஐ.சி.யின் அனைத்து சேவைகளையும் ஒருநாள் புறக்கணிப்பு செய்து இந்த போராட்டத்தை நடத்தினர்.
எல்.ஐ.சி. தஞ்சை கோட்டத்தின் பெரம்பலூர் கிளை முகவர்கள் சங்கம் மற்றும் எல்.ஐ.சி. முதன்மை ஆலோசகர்கள் சங்கம் சார்பில் வெங்கடேசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு முகவர்கள் சங்க கிளை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தை கோட்ட துணை தலைவர் நடராஜன் தொடங்கி வைத்தார். செயலாளர் சந்திரமோகன், பொருளாளர் சுப்புராஜ், இணைச்செயலாளர் செந்தில்குமார், கோட்ட பிரதிநிதி சுபாஷ்சந்திரபோஸ் உள்பட பலர் ேபசினார்கள்.

Next Story