வெறிநாய்கள் கடித்து சிறுமி உள்பட 20 பேர் காயம்


வெறிநாய்கள் கடித்து சிறுமி உள்பட 20 பேர் காயம்
x
தினத்தந்தி 24 March 2021 3:16 AM IST (Updated: 24 March 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே வெறிநாய்கள் கடித்து சிறுமி உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

பாவூர்சத்திரம், மார்ச்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டியில் 3 வெறி நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்த நாய்கள் கடித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அந்த வெறி நாய்களை பிடிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story