பிரசார நேரம் முடிந்து வந்ததால் தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி சென்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்


பிரசார நேரம் முடிந்து வந்ததால் தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி சென்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
x

பிரசார நேரம் முடிந்து வந்ததால் பிரசாரம் செய்யாமல் தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

ஈரோடு
பிரசார நேரம் முடிந்து வந்ததால் பிரசாரம் செய்யாமல் தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். 
சூறாவளி பிரசாரம்
தமிழக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் நேற்று அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதற்காக சித்தோடு நால்ரோடு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களான கே.ஏ.செங்கோட்டையன் (கோபி), கே.சி.கருப்பணன் (பவானி), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), யுவராஜா (ஈரோடு கிழக்கு), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஜெயக்குமார் (பெருந்துறை), பண்ணாரி (பவானிசாகர்), சண்முகவேல் (அந்தியூர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொண்டர்கள் ஏமாற்றம்
பிரசாரத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசினார்கள். ஏற்கனவே உடுமலைப்பேட்டை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 11.05 மணி அளவில் சித்தோடு பகுதிக்கு வந்தார். 10 மணியை கடந்ததால் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கிடையாது. இதனால் அவர் தொண்டர்களின் வரவேற்பை பெற்று காரில் அமர்ந்தவாறு அவர்களை பார்த்து கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம் பேச முடியாமல் புறப்பட்டு சென்றதால் அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் 10 மணிக்கு பிறகு ஒலி பெருக்கி மூலமாக பிரசாரம் நிறுத்தப்பட்டாலும், ஓ.பன்னீர்செல்வம் வரும் வரை தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்கள் நால்ரோடு பகுதியில் சாலையிலேயே அமர்ந்து இருந்தார்கள். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story