கர்நாடக மாநில பஸ்சில் கடத்தப்பட்ட 280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கர்நாடக மாநில பஸ்சில் கடத்தப்பட்ட 280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 10:41 PM GMT (Updated: 23 March 2021 10:41 PM GMT)

கர்நாடக மாநில பஸ்சில் கடத்தப்பட்ட 280 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து செயல்பட்டனர். அப்போது போலீஸ் நிலையம் வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த பஸ்சில் 10 மூட்டைகளில் 280 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை பிடித்து மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடு்ப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியும் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story