பெருந்துறை அருகே பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது
பெருந்துறை அருகே பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசர் கைது செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசர் கைது செய்தனர்.
திருட்டு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அந்த பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய லேத் பட்டறைக்கு நேற்று முன்தினம் மதியம் ஆண் மற்றும் பெண் என 2 பேர் வந்து உள்ளனர். அப்போது யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த 2 பேரும் திடீெரன பட்டறைக்குள் புகுந்து 2 எந்திரங்களை தூக்கிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி சென்றனர். அப்போது அங்கு பட்டறையில் வேலைக்கு பார்க்கும் தொழிலாளி ஒருவர் தற்செயலாக வந்து உள்ளார். பட்டறைக்குள் புகுந்து எந்திரங்களை 2 பேர் தூக்கி கொண்டு சென்றதை கண்டதும் திருடன், திருடன், என சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 43), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பரமேஸ்வரி (35) என்பதும், அவர்கள் 2 பேரும் மகேந்திரனின் லேத் பட்டறையில் வேலை பார்த்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து நின்றுவிட்டதும், நேற்று முன்தினம் பட்டறைக்கு வந்த அவர்கள் அங்கிருந்த 2 எந்திரங்களை திருடியதும்,’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் பரமேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story