விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கடத்தூர்
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
நஷ்ட ஈடு
கோபியை அடுத்த அரக்கன்கோட்டை பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 51). இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 26.10.2015-ந் தேதி அன்று அரக்கன்கோட்டை சத்தி மெயின்ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொண்டப்ப நாய்க்கன் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இவருக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தேவராஜ் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு நஷ்டஈடு கோரி கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 13.4.2016-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதய நீதிபதி ஆனந்த், தேவராஜ்க்கு அரசு போக்குவரத்து கழகம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 165 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கடந்த 27.3.2019 அன்று உத்தரவிட்டார்.
அரசு பஸ் ஜப்தி
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் தேவராஜ்க்கு நஷ்டஈடு வழங்கவில்ைல என்று தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து 24.6.2019-ந் தேதி தேவராஜ் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.
அதன் பிறகும் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்காததால் கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன், அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், நேற்று நீதிமன்ற ஊழியர்கள் கோபியிலிருந்து ஈரோடு செல்ல தயாராக இருந்த அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்தனர்.
-------------
Related Tags :
Next Story