பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடத்தூர்
கொரோனா நோய் பரவாமல் இருக்க கடந்த ஆண்டு கொடிவேரி அணை மூடப்பட்டது. அதன் பிறகு 9 மாதங்கள் கழித்து சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் பண்டிகை வரை மூடப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து அங்கு அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்களுக்கு கொடிவேரி அணை மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, கொடிவேரி அணையின் இயற்கை அழகை பார்க்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story