11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி பணியில் 18,832 பேர் ஈடுபடுகிறார்கள்- கலெக்டர் ராமன் தகவல்


11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி பணியில் 18,832 பேர் ஈடுபடுகிறார்கள்- கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 24 March 2021 4:30 AM IST (Updated: 24 March 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 18 ஆயிரத்து 832 பேர் தேர்தல் அன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ளனர் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 18 ஆயிரத்து 832 பேர் தேர்தல் அன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ளனர் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
குலுக்கல் முறையில் தேர்வு 
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி 2-ம் கட்டமாக நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராமன் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் வந்தனா சிங், பங்கஜ் யாதவ், தினேஷ் பிரசாத், சின்மயி புன்லிக் ராவ் கோட்மரே, டாக்டர் நிதின் மதன் குல்கர்னி, டாக்டர் ருபேஷ் குமார், ராம சந்துருடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் ராமன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் 18 ஆயிரத்து 832 பேர் பணிபுரிய உள்ளனர். அதன்படி கெங்கவல்லி தொகுதியில் உள்ள 351 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1,544 பேர் பணிபுரிய உள்ளனர். 
ஆத்தூர் தொகுதியில் உள்ள 346 வாக்குச்சாவடி மையங்களில் 1,524 பேரும், ஏற்காடு தொகுதியில் உள்ள 408 வாக்குச்சாவடி மையங்களில் 1,796 பேரும், ஓமலூர் தொகுதியில் உள்ள 426 வாக்குச்சாவடி மையங்களில் 1,876 பேரும் பணி புரிகின்றனர்.
பணி ஒதுக்கீடு
மேட்டூர் தொகுதியில் உள்ள 402 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1,768 பேரும், எடப்பாடி தொகுதியில் உள்ள 403 வாக்குச்சாவடி மையங்களில் 1,772 பேரும், சங்ககிரி தொகுதியில் உள்ள 389 வாக்குச்சாவடி மையங்களில் 1,712 பேரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 423 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1,860 பேரும், சேலம் வடக்கு தொகுதியில் உள்ள 397 வாக்குச்சாவடி மையங்களில் 1,748 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் உள்ள 381 வாக்குச்சாவடி மையங்களில் 1,676 பேரும், வீரபாண்டி தொகுதியில் உள்ள 354 வாக்குச்சாவடி மையங்களில் 1,556 பேர் என மொத்தம் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தலில் 18 ஆயிரத்து 832 பேர் பணிபுரிய உள்ளனர்.
அவர்களுக்கான வாக்குச்சாவடிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வருகிற 27-ந் தேதி 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 
இவ்வாறு கலெக்டர் கூறினார். 
தொடர்ந்து நுண் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Next Story