நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் நாமக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,963 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,769 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 83 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story