வேட்பாளர்களிடம் 17 அம்ச கோரிக்கைகள் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு


வேட்பாளர்களிடம் 17 அம்ச கோரிக்கைகள் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு
x
தினத்தந்தி 24 March 2021 4:44 AM IST (Updated: 24 March 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களிடம் 17 அம்ச கோரிக்கைகள் வைக்க பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு

திருப்பூர்
திருப்பூர் சைல்டுலைன் அலுவலகத்தில் குடிமக்கள் செயல்பாட்டுக்குழு மற்றும் வளரிளம், பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் ஆலோசகர் நம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. பின்னலாடை தொழில் மூலம் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். தொழிலாளர்கள் தமக்கான சட்டப்படியான உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். தொழிலாளர் நலன் காப்பதில் மாநில அரசின் கொள்கை திட்டங்கள், சட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு, பின்னலாடை தொழிலில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் சார்பில், 17 தேர்தல் கோரிக்கைகளை எங்கள் குழுவினர் விவாதித்து உருவாக்கி உள்ளோம். இந்த கோரிக்கைகளை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களிடம் வழங்க முடிவு செய்து உள்ளோம். வெற்றி பெறுகிற வேட்பாளர்கள் இதனை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பனியன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாகவும், வேட்பாளர்களிடம் வழங்குவதற்காகவும் அட்டையில் பனியன் வடிவில் தயாரித்து இளம்பெண்கள் வைத்திருந்தனர்.

Next Story