உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்


உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2021 4:47 AM IST (Updated: 24 March 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே காரில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியதில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்;
தஞ்சை அருகே காரில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியதில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும்படையினர் சோதனை 
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ கொடுப்பதை தடுக்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையை அடுத்த திட்டை பிரிவு சாலையில் பறக்கும்படை அலுவலர் பழனியம்மாள் தலைமையிலான குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை மாவட்டம் மெலட்டூர் வடக்குதெருவை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் தாமோதரன்(வயது31) என்பவர் தஞ்சையில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த பணம் குறித்து பறக்கும்படையினர் விசாரித்தபோது வங்கியில் இருந்து எடுத்து வருவதாக தாமோதரன் தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் பறிமுதல் 
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்ததால் ரூ.1 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து தஞ்சை தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் விசாரணை செய்து அதன் அறிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைத்ததுடன் ரூ.1 லட்சத்தை சார் கருவூல அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைத்தார்.

Next Story