கோவையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை


கோவையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 24 March 2021 5:48 AM IST (Updated: 24 March 2021 5:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீஸ்சார் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.

கோவை,

கோவையில் விபத்துகளை தடுக்க மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலை சந்திக்கும் இடங்களில் அதிவேகமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 65 இடங்களில் இரவு நேரத்தில் ஒளிரும் ஒளிப்பான்கள் சாலைகளின் நடுவே இரு நேர் கோட்டில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு கூறும்போது, கோவை மாநகரில் வேகத்தடைகள் இன்றி உள்ள சாலைகள் சந்திக்கும் இடங்களில் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கவும் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, தெற்கு தாசில்தார் அலுவலக சந்திப்பு பகுதி உள்பட 65 இடங்களில் சிறிய அளவிலான ஒளிரும் ஒளிப்பான்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இது இரவு நேரங்களில் வாகனங்களின் விளக்குபட்டு ஒளிரும் தன்மை கொண்டது. மேலும் சாலையில் சிறிய வேகத்தடை போன்றுதான் இது இருக்கும். இதனால் பகலில் செல்லும் வாகன ஓட்டிகளும் சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தை குறைத்து செல்வார்கள். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார்.

Next Story