நத்தக்காடையூரில் வெறிநாய் கடித்து குதறியதில் 13 பேர் படுகாயம்


நத்தக்காடையூரில் வெறிநாய் கடித்து குதறியதில் 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 March 2021 5:55 AM IST (Updated: 24 March 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

நத்தக்காடையூரில் வெறிநாய் கடித்து குதறியதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

முத்தூர்
நத்தக்காடையூரில் வெறிநாய் கடித்து குதறியதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு
வெறிநாய் கடித்தது
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர்-மருதுறை சாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அந்த நாய்க்கு வெறி பிடித்ததாக தெரிகிறது. இதனால் அந்த நாய் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது.  
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த நாயை கட்டிபோட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த நாய் அந்த பெண்ணை கடித்து விட்டு அங்கிருந்து வெளியே தப்பி ஓடிவிட்டது.
13 பேர் படுகாயம்
பின்னர் வெறி பிடித்த நிலையில் சாலையில் சுற்றி திரிந்த அந்த நாய்  நத்தக்காடையூர் - ஈரோடு சாலையில் சுற்றி வந்தது. அத்துடன் அந்த வழியாக வந்த வெற்றிவேல் (வயது 26), சக்திவேல் (15), சம்பத்குமார் (55) மற்றும் 2 முதியவர்கள், பள்ளி மாணவி ஒருவர், ஆண்கள், பெண்கள் உள்பட மொத்தம் 13 பேரை கால், உடல் பகுதியில் கடித்து குதறியது.
இந்த வெறி நாய் தாக்குதலில் நிலைகுலைந்து பலத்த காயம் அடைந்த 13 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக நத்தக்காடையூர் அரசு ஆரம்ப நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.சவுமியா தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, தடுப்பூசி போட்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
 இதனை தொடர்ந்து வெறி நாய் கடித்து காயமடைந்த 13 பேர் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 2 பேர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த 13 பேரில் நேற்று இரவு ஒரு சிலர் வீடு திரும்பினர். 

Next Story