ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ 9 லட்சம் பறிமுதல்


ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ 9 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2021 6:29 AM IST (Updated: 24 March 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.9 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் நேற்று வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தனர். 

அதில் ரூ.9 லட்சத்து 63 ஆயிரத்து 150 இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுபோன்று கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு வந்த கேரள பதிவு எண் கொண்ட போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். காரில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் இல்லை.

 ஆனால் காருக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த காரை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கேரள மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர் என்பதும், அந்த கார் அவருடையது என்பதும் தெரியவந்தது.

 உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின் கார் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story