பணத்திற்கும், பாசத்திற்கும் நடக்கும் போராட்டம் - தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி உருக்கமான பேச்சு
பணத்திற்கும், பாசத்திற்கும் நடக்கும் போராட்டம் என தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி உருக்கமாக பேச்சு
சோமரசம்பேட்டை,
ஸ்ரீரங்கம் தொகுதி வேட் பாளர் பழனியாண்டி அந்தநல்லூர் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக கம்பரசம்பேட்டையில் தொகுதி பூத் அலுவலகம் திறந்து வைத்து, அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பழூர், முத்தரசநல்லூர், அல்லூர், திருச்செந்துரை, பெரியகருப்பூர், மேக்குடி, கொடியாலம், திருப்பராய்த்துறை, பெருகமணி, பெட்டவாய்த்தலை, சிறுகமணி ஆகிய பகுதிகளில் வாக்கு கேட்டு சென்றார். ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது பழனி யாண்டி பேசுகையில், படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாங்கி கொடுப்பது என் கடமை. நான் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன். தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பல நல திட்டங்கள், நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, சிலிண்டர் மானியம், விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ஆகியவற்றை எடுத்து கூறினார்.
மேலும் இந்த தேர்தல் பணத்திற்கும், பாசத்திற்கும் நடக்கும் போராட்டம். பணமா? பாசமா? என்றால், நான் இந்த மக்களிடம் மிகுந்த பாசம் கொண்டவன். ஆகவே இந்த முறை என்னை நீங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற ைவக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.
அவருடன் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் கதிர்வேல், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், பேரூர் நடராஜன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story