லால்குடியில் திருமங்கலம் அணையை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பேன் - த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி


லால்குடியில் திருமங்கலம் அணையை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பேன் - த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி
x
தினத்தந்தி 24 March 2021 9:57 AM IST (Updated: 24 March 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

லால்குடியில் திருமங்கலம் அணையை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி அளித்தார்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி வடக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் திருமங்கலம், நகர், கீழேபெருங்காவூர், மருதூர், மாடக்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான், நகர்கிராமத்தைச் சேர்ந்தவன். எனது சொந்த ஊரில் நான் வாக்கு கேட்டு பிரசாரம் செய்வது, எனக்கு பெருமையாக உள்ளது. நான் இந்த மண்ணின் மைந்தன். என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எனக்கு வாக்களிக்கவும். திருமங்கலத்தில் கூழையாறு - பங்குனி ஆற்றை இணைக்கும் திருமங்கலம் அணை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதி விவசாய பகுதியாகும் இங்கு அரசு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி வாக்கு சேகரித்தார். 

இதில் ஒன்றிய செயலாளர்கள் லால்குடி வடக்கு வக்கீல் அசோகன், தெற்கு சூப்பர் நடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன், பாரதீய ஜனதா புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார், நகர் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், திருமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார், மற்றும் அ.தி.மு.க, த.மா.கா., பா.ஜ.க, பா.ம.க, கட்சித் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.

Next Story