விவசாயிகளின் துயர் துடைக்க 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் - துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி பிரசாரம்


விவசாயிகளின் துயர் துடைக்க 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் - துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி பிரசாரம்
x
தினத்தந்தி 24 March 2021 10:37 AM IST (Updated: 24 March 2021 10:37 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் துயர் துடைக்க 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துறையூர், 

திருச்சி மாவட்டம் துறையூரில் அ.தி.மு.க சட்டமன்ற வேட்பாளர் இந்திராகாந்தி, துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான கொல்லப்பட்டி, சொக்கநாதபுரம், கேம்பியம் பட்டி, அய்யம்பாளையம் வேலாயுதம்பாளையம், கண்ணனூர் பாளையம், கள்ளிக்குடி, சின்னசேலம் பட்டி, சமத்துவபுரம் கொத்தம்பட்டி ஆகிய  கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் துறையூரில் உள்ள பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சென்று, அங்கிருந்த விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது தமிழகத்தில் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட ஒரே முதல்-அமைச்சர், நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் துயர் துடைப்பதற்காக பகுதிநேரமாக இயங்கிவரும் மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் கொண்டு வருவதாக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். 

24 மணி நேரமும், மும்முனை மின்சாரம் கிடைத்தால் விவசாயியான நீங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைவீர்கள். அதேபோன்று விவசாய கடன் தள்ளுபடி செய்ததுடன், விவசாயிகளின் குழந்தைகள் கல்விக்கடனை ரத்து செய்வார். அதற்காக நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்தார். உடன் துறையூர் ஒன்றிய செயலாளர்கள் சேனைசெல்வம், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன்.காமராஜ், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன் மற்றும் ஏராளமான ெதாண்டர்கள், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story