திருப்பைஞ்சீலி மக்களுக்கு குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பேன் - தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் வாக்குறுதி
திருப்பைஞ்சீலி மக்களுக்கு குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பேன் என தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் வாக்குறுதி அளித்தார்.
திருச்சி,
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட் டியிடும் மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இவர் நேற்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட (திருப்பைஞ்சீலி கடைவீதி திருப்பைஞ்சீலி வடக்கு தெரு பகுதியில்) திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கள் கேட்டார் . அப்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலா ளர்களையும், பொதுமக்களை யும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என்றும், காவிரி குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் வேட்பாளர் கதிரவன் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போர்க்கால அடிப்படையில் உங்கள் குறைகள் தீர்க்கப்படும். மேலும் நான் வெற்றி பெற்றதும், இத்தொகுதியில் செய்யும் திட்டங்களை பார்த்து அடுத்த முறை நீங்களே கதிரவன் தான் வேட்பாளராக வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு எனது செயல்பாடுகள் இருக்கும் என்று உறுதியளித்தார். மேலும் பிள்ளையார் கோவில், பாரதியார் நகர் தெற்கு தெரு, ஈச்சம்பட்டி, கணேசபுரம், வாழ் மால்பாளையம், கவுண்டம் பட்டி, முருங்கபட்டி, நல்லான் கொட்டம் சுப்ரமணியபுரம், துவரங்குளம், பச்சைவெளி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.
இதில் மண்ணச்ச நல்லூர் தி.மு.க. அவைத் தலைவர் அம்பிகாபதி, கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த ம.தி.மு.க.வின் டி.டி.சி. சேரன் மற்றும் அனைத்து மதசார்பற்ற கூட் டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story