தேர்தல் அறிக்கையில் அறிவித்த ‘மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள்
‘தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்‘ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வனத் துறை அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன் போட்டி யிடுகிறார். நேற்று இவர், திண்டுக்கல் பூச்சிநாயக்கன் பட்டி, அழகர் தெரு, அரசமரம் 1&வது தெரு, பக்தவச்சலம் தெரு, முகமதியாபுரம், எருமைக்கார தெரு, ஆர்.வி. நகர், முத்தழகுபட்டி மெயின் ரோடு, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதன் பின்னர் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக் கையில் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் ஒவ் வொன்றாக நிறைவேற்றப் படும். குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜி.பி. இணையதள டேட்டா ஓராண்டுக்கு வழங்கப்படும்.
மேலும் அரசு கேபிள் இலவசமாக வழங்குதல், பெண்களுக்கு பஸ்களில் 50 சதவீத கட்டணம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500, வாசிங்மிஷின், சோலார் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவது இல்லை. முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படி அல்ல. அவர் சொன்னதை செய்வார். எனவே சொன்னதை செய்யும் அ.தி.மு.க.வுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, சேசு, மோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
இதே போல் மாலையில் திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story