திருவாரூர் அருகே டீக்கடையில் டீ தயாரித்து ஓட்டு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம்
திருவாரூர் அருகே டீக்கடையில் டீ தயாரித்து அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் ஓட்டு சேகரித்தார்.
கொரடாச்சேரி,
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி ஒன்றியம் காவனூர், அம்மையப்பன், ஆய்க்குடி, நீடாமங்கலம், எண்கண், காப்பணாமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, மணக்கால், வடகண்டம், திருக்கண்ணமங்கை, அகரத்திருநல்லூர், காட்டூர், பவித்திரமாணிக்கம், தேவர்கண்டநல்லூர், பெருந்தரக்குடி, கமலாபுரம், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், விடயபுரம், முசிறியம், கொரடாச்சேரி ஆகிய இடங்களில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
எண்கண் ஊராட்சியில் வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தபோது அங்கு உள்ள ஒரு டீக்கடையில் டீ தயாரித்து, தொண்டர்களுக்கு வழங்கினார். முன்னதாக வேட்பாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் உதவிட வேண்டும்.
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு தேவையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் உங்களோடு இணைந்து பணியாற்றி பெற்றுத்தருவேன் என உறுதி கூறுகிறேன்’ என்றார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story