முஸ்லிம் மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன் பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் வாக்குறுதி


முஸ்லிம் மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன் பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் வாக்குறுதி
x
தினத்தந்தி 24 March 2021 4:05 PM IST (Updated: 24 March 2021 4:05 PM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம் மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன் என்று பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம் செய்தார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மதுக்கூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மதுக்கூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேற்காடு, அத்திவெட்டி, வாட்டாகுடி (உக்கடை), விக்ரமம், இளங்காடு, சிரமேல்குடி, கல்யாணஓடை, காரப்பங்காடு, காடந்தாங்குடி, மதுரபாசணியபுரம், பெரியகோட்டை, சிராங்குடி, சொக்கணாவூர், புளியங்குடி, கன்னியாகுறிச்சி, பாவாஜிகோட்டை, பழையகுன்னம் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து மதுக்கூர் பேரூராட்சிகளிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் பொதுமக்களையும் மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பேசியதாவது:-

முஸ்லிம் மக்களுக்கு நான் என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன். மதுக்கூர் பகுதியில் உள்ள அனைத்து பாலங்களும் புதுப்பித்து தர நடவடிக்கை எடுப்பேன். மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் வேட்பாளருக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

வேட்பாளருடன் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், தண்டபாணி, த.மா.கா. சார்பில் ரவிச்சந்திரன், புகழேந்தி, பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. சார்பில் முரளி கணேஷ், வரதராஜன், அன்பரசன், பா.ம.க சார்பில் தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story