ஆத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்


ஆத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 March 2021 4:55 PM IST (Updated: 24 March 2021 4:55 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

ஆறுமுகநேரி:
ஆத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
செயல்விளக்க நிகழ்ச்சி
தமிழகத்தில் சட்டமன்ற ேதர்தலில் வாக்காளர்கள், 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி ஆத்தூர் திரையரங்கம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் புதிய முறைகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதுவும் மனசாட்சியின் படி வாக்களிக்க வேண்டும். நாம் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை சிந்தித்து, அவர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும். மேலும் புதிய வாக்காளர்களாக வருகை தருகிற இளம்பெண்கள், இளைஞர்கள், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து வாக்களியுங்கள். ஓட்டு என்பது நமது உரிமை. அதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ என்றார். பின்னர் கலெக்டர் முன்னிலையில் அங்கிருந்த பெண்கள் அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணி
தொடர்ந்து அவர் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி ஆத்தூர் திரையரங்கம் முன்பு இருந்து புறப்பட்டு வடக்கு போலீஸ் நிலையம் வரை சென்றது. இதில் மகளிர் குழுவினர், மதர் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் மகளிர் குழுவினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். 
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தூத்துக்குடி பயிற்சி உதவி கலெக்டர் சதீஸ், திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிச்சை, மாவட்ட திட்ட அதிகாரி வேல்ராஜ், ஆத்தூர் நிர்வாக அதிகாரி மணிமொழி ரங்கசாமி செல்வன், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, ஆத்தூர் வருவாய் துறை அதிகாரி பிளாரன்ஸ் ஜெயராணி, ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் லிங்க பாண்டி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story