தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பிக்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினர்  தபால் ஓட்டுப்போட விண்ணப்பிக்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 24 March 2021 5:34 PM IST (Updated: 24 March 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த பணிக்கு விருப்பம் தெரிவித்து உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது தபால்ஓட்டு போடுவதற்கு படிவம் 12டி ஐ பூர்த்தி செய்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலோ பெற்று, அதனுடன் தங்கள் தேர்தல் அடையாள அட்டை நகலை இணைத்து நாளை (வெள்ளிக்கிழமை) க்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story