3 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
ோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் அந்த தொகுதிகளுக்கு கூடுதலான எந்திரங்கள் ரேண்டம் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன
கோவை,
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய தொதிகளில் தலா 21 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சின்னங்கள் தான் பொருத்த முடியும். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் நோட்டாவுக்கு ஒரு பொத்தான் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மொத்தம் உள்ள 16 பொத்தான்களில் 15 வேட்பாளர் பெயர்கள் தான் இடம் பெற முடியும்.
ஆனால் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் 15 பேருக்கு மேல் அதாவது தலா 21 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வி.வி.பேட் எந்திரம் ஒன்று போதும்.
எனவே 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் 3 தொகுதிகளுக்கும் கூடுதலான எந்திரங்கள் ரேண்டம் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கோவை வடக்கு தொகுதியில் உள்ள 499 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 499 எந்திரங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதலாக 100 எந்திரங்கள் வீதம் மொத்தம் 599 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
இதே போல கோவை தெற்கு தொகுதிக்கு 359 எந்திரங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதலாக 72 எ ந்திரங்கள் வீதம் மொத்தம் 431 எந்திரங்களும், சிங்காநல்லூர் தொகுதிக்கு 439 எந்திரங்களும், 20 சதவீதம் கூடுதலாக 90 எந்திரங்கள் என மொத்தம் 529 எந்திரங்கள் மாவட்ட கலெக்டர் ராஜாமணி முன்னிலையில் நேற்று ரேண்டம் முறையில் ஒதுக்கப்பட்டன.
Related Tags :
Next Story