தேர்தல் பணியாளர்கள் விலக்குகோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று நோட்டீஸ்
தேர்தல் பணியாளர்கள் விலக்குகோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மலைப்பிரதேசம் என்பதால் தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு பஸ் வசதி இல்லை.
மேலும் பயணிக்க நீண்ட நேரம் ஆகிறது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சிலர் தேர்தல் பணியில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சென்றனர். இதை தொடர்ந்து ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவுவாயில் பகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
அதில், சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள பணியாளர்கள், தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அணுக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story