திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 March 2021 9:12 PM IST (Updated: 24 March 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது.

திண்டுக்கல்:
தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10-க்கும் குறைவாக இருந்து வந்தது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்து 732 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் 237 பேர் இறந்துள்ளனர்.

Next Story