தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்புற வராண்டா பகுதிக்கு நேற்று மாலை 4 மணி அளவில் ஆண் ஒருவர வந்தார். அவர் திடீரென்று, தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து விரைந்து வந்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூர் தியாகிகுமரன் காலனியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 50) என்பதும், திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
தனது தம்பி தனது தயாரிடம் இருந்து சொத்தை அபகரித்து விட்டதாகவும், மேலும் தாயாரை அடித்து துன்புறுத்துவதாகவும் இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தீக்குளிக்க முயன்றதாக சந்திரசேகர் போலீசாரிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து சந்திரசேகரை வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தீக்குளிக்க முயன்றது தொடர்பாக சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story