சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சப் கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் சப் கலெக்டர் ஆய்வு
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சப் கலெக்டர் மதுபாலன் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் மையம்
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கும் பணி மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் வாக்குகள் எண்ணப்படும் அறைகளில் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சப் கலெக்டரும், சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மதுபாலன் நேற்று காலை நேரில் பார்வையிட்டதோடு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் மின் விசிறிகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதா? எனவும், குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் அங்கு காவல்துறை மூலம் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் சப் கலெக்டர் மதுபாலன் கேட்டறிந்தார். ஆய்வின் போது வட்ட துணை ஆய்வாளர் வீரமணி, பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கவிதா, பணி ஆய்வாளர் முருகானந்தம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story