தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்
தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்ட போலீசாருடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் முன்வருமாறு மாவட்ட காவல்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடந்த பல தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன், அவர்கள் தேர்தலில் தபால் வாக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே, விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கைப்பேசி எண்.9443282223, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளரின் கைப்பேசி எண்: 9498183147 மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் எண்: 04567-232243 மற்றும் 04567-232110,232111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story