80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்பு
80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்பு
சோளிங்கர்
சோளிங்கர் அருகே 80 அடி ஆழமுள்ள கிணற்றறில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
சோளிங்கரை அடுத்த கூடலூரை சேர்ந்தவர் சண்முகம், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான சினை மாட்டை அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டிப் போட்டு இருந்தார். அந்தச் சினைமாடு கால் தவறி அருகில் இருந்த 80 அடி ஆழ விவசாய கிணற்றில் விழுந்து விட்டது.
இதுகுறித்து அவர், சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் கோபால் தலைமையில் 8 வீரர்கள் விரைந்து வந்து, 80 அடி ஆழ கிணற்றில் 5 அடி உயர தண்ணீரில் உயிருக்கு பேராடிய சினை மாட்டை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் கயிற்றுக்கட்டி உயிருடன் மீட்டனர்.
இதற்கு முன்பு இதே கிணற்றில் 60 வயது முதியவர் விழுந்துள்ளார். 2 கன்றுக்குட்டிகளும் விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story