தபால் வாக்கு சீட்டு அச்சிடும் பணி
திருப்பூரில் 8 சட்டமன்ற தொகுதிக்கும் தபால் வாக்கு சீட்டு அச்சிடும் பணி திருப்பூரில் உள்ள அச்சகத்தில் நடக்கிறது. இந்த அச்சகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூரில் 8 சட்டமன்ற தொகுதிக்கும் தபால் வாக்கு சீட்டு அச்சிடும் பணி திருப்பூரில் உள்ள அச்சகத்தில் நடக்கிறது. இந்த அச்சகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தபால் வாக்குச்சீட்டு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் கொரோனா பாதித்தவர்கள் என தபால் வாக்கு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் ஏராளமானவர்கள் இதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
வாக்காளர்களிடம் விருப்ப மனு பெற்று அதற்கு ஏற்ப தொகுதி வாரியாக தபால் வாக்கு எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. தபால் வாக்குக்கான வேட்பாளர் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு அச்சிடும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் படிவம் 7 ஏ மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தப்படும் பேலட் ஷீட்டுகளை தேர்தல் கமிஷன் சென்னையில் அச்சடித்து வழங்கும். இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டுகளை அந்தந்த மாவட்டத்திலேயே அச்சிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 60 ஆயிரத்திற்கும் மேல் தபால் வாக்கு சீட்டுகள் அச்சடிக்க திருப்பூர் காந்திநகரில் உள்ள ஒரு அச்சகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.
அதன்படி அந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த அச்சகத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் இவை அச்சிடப்படுகின்றன. இதன் பின்னர் தபால் வாக்கு சீட்டுகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் தேவைக்கு ஏற்ப அதிகாரிகள் பிரித்து அனுப்புவார்கள்.
Related Tags :
Next Story