சூளகிரி அருகே சாலை வசதி கோரி கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் போராட்டம்


சூளகிரி அருகே சாலை வசதி கோரி கருப்புக்கொடியுடன் கிராம மக்கள்  போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2021 11:35 PM IST (Updated: 24 March 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே சாலை வசதி கோரி கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் மாரண்டபள்ளி ஊராட்சி ஒண்டியூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் நீண்ட காலமாக சாலை வசதியின்றி கிராம மக்களும், மாணவர்களும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு  கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று தங்கள் வீடுகள் மற்றும் கிராம எல்லையில் கருப்புக்கொடி கட்டி சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். மேலும் அவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story