சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 March 2021 11:37 PM IST (Updated: 24 March 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பாளையக்காட்டில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
திருப்பூர் பாளையக்காட்டில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை பணிகள்
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ளது பாளையக்காடு. இங்குள்ள கிழக்கு பகுதி முதல் வீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கால்வாய் குடிநீர் குழாய் பதிக்கும் பணி சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் தோண்டப்பட்ட நிலையில் ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது குழாய்கள் சேதமடைந்து அப்பகுதியில் குடிநீர் வினியோகம் கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் குழாய் பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில் நேற்று ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்த பின்னர் சாலை பணிகளை மேற்கொள்ள கோரி பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது
தடுத்து நிறுத்தி போராட்டம்
பாளையக்காடு பகுதியில் கடந்த 3 மாதங்களாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாங்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தோம். இந்த நிலையில் பணிகளின் போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்து 15 நாட்களாக குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தேர்தல் நேரம் என்பதால் மக்களை ஏமாற்றும் வகையில் அரைகுறையாக சாலை பணிகள் தொடங்கியுள்ளனர். எனவே பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பாளையகாடு பகுதியில் சாலை பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Next Story