பதற்றமான 119 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெப்கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெப்கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்ளின் முகவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் உமானந்தா டோலி செலவின பார்வையாளர் சுகாசினி எஸ்.கோத்மேர் போலீஸ் பார்வையாளர் நிலாப் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 535 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது முந்தைய தேர்தல்களில் இந்த வாக்குச்சாவடிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் அதை வைத்து பதற்றமானவை என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். அதுபோல் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் என கூடுதல் பாதுகாப்பு போடப்படும். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்த விவரத்தை வேட்பாளர்கள் தெரிவித்தால் அந்த வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
தபால் ஓட்டுகள்
வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை நாளை 30ந் தேதி 3ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கிய செலவின விலைப்புள்ளியை விட குறைவான விலைக்கு பொருட்கள் கிடைத்தாலும் அதற்கான அசல் ரசீதை வைத்தால் அதன்படி செலவினம் கணக்கீடு செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 2ந் தேதி காலை 8 மணிக்குள் தபால் ஓட்டுகள் வந்து சேர வேண்டும்.
அதுபோல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுகள் போடும் வசதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு தொகுதியில் 167 பேர் தபால் ஓட்டுகள் போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். தபால் ஓட்டு சீட்டு அச்சிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். பின்னர் அதிகாரிகள் குழுவினர் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோருடன் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று அங்கு மறைவிடத்தில் வாக்குப்பதிவு செய்து ஓட்டுப்பெட்டியில் போடுவதற்கான வசதி செய்யப்படும். வீடு, வீடாக வாக்கு சேகரிக்க செல்லும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story