கலெக்டர் அண்ணாதுரை திடீர் வாகன சோதனை


கலெக்டர் அண்ணாதுரை திடீர் வாகன சோதனை
x
தினத்தந்தி 24 March 2021 11:46 PM IST (Updated: 24 March 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் அண்ணாதுரை திடீர் வாகன சோதனை நடத்தினார்.

திருக்கோவிலூர், 

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி யாரேனும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்து செல்கின்றனரா என்று கண்காணித்து வருகின்றனர். 
இந்த நிலையில்  திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன.

வாகன சோதனை

 இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அண்ணாதுரை நேற்று திருக்கோவிலூருக்கு வந்தார்.
 பின்னர் அவர் திடீரென அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அதில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று சோதனை நடத்தினார். இதையடுத்து மணம்பூண்டியிலும்  கலெக்டர் அண்ணாதுரை வாகன சோதனை மேற்கொண்டார். இதில் பணமோ, பரிசு பொருட்கள் சிக்கவில்லை. பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம்,  வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதில் தவறுகள் ஏதும் நடைபெறக்கூடாது என்று வலியுறுத்தினார். 

Next Story