வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு


வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 25 March 2021 12:35 AM IST (Updated: 25 March 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே வீட்டு கதவை உடைத்து மர்மநபர்கள் நகையை திருடி சென்றனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 29). உடல் நிலை சரியில்லாததால், இவர் சுத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த  தனது உறவினர் வீட்டில் மனைவி தனலட்சுமியுடன் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனலட்சுமி அருணாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை மா்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story