கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 March 2021 12:38 AM IST (Updated: 25 March 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கரூர்
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெங்கமேட்டை சேர்ந்த 84 வயது முதியவர், மாயனூரை சேர்ந்த 53 வயது ஆண், பரமத்திவேலூரை சேர்ந்த 36 வயது ஆண் உள்ளிட்ட 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story