பீரோவை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
பீரோவை உடைத்து ரூ.20 ஆயிரம் திருடப்பட்டது.
கோட்டைப்பட்டினம், மார்ச்.25-
மீமிசல் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 50). சம்பவத்தன்று குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடினார். பின்னர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு கிராம் தங்கடாலரை திருடினான். தொடர்ந்து அந்த ஆசாமி, ராக்கப்பனின் மகள் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை அறுக்க முயன்றபோது, அவர் விழித்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அந்த ஆசாமி மிளகாய்பொடி ஸ்பிரே அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து ராக்கப்பன் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story