4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் செலவின கணக்குகள் நாளை முதல் ஆய்வு


4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் செலவின கணக்குகள் நாளை முதல் ஆய்வு
x
தினத்தந்தி 25 March 2021 12:44 AM IST (Updated: 25 March 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் செலவின கணக்குகள் நாளை முதல் ஆய்வு செய்யப்படுகிறது.

கரூர்
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்தம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் செலவிடப்படும் தேர்தல் தொடர்பான செலவின கணக்குகள் தேர்தல் செலவின பார்வையாளர் பியூஸ்பாட்டியாலால் 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்கிறார்.
 அதன்படி நாளை(வெள்ளிக்கிழமை) முதல் கட்டமாகவும், 30-ந் தேதி 2-வது கட்டமாகவும் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி 3-வது கட்டமாகவும் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நாட்களில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தேர்தல் செலவு தொடர்பான பதிவேடுகள், ரசீதுகள், வங்கி புத்தகம் மற்றும் உரிய அனைத்து அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.  இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story