துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் வாங்கப்பாளையம் பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(வயது 42). இவர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பரிமளா என்கிற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். ரவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ரவி, விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story