வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 March 2021 1:44 AM IST (Updated: 25 March 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை, மார்ச்:
நெல்லை அருகே உள்ள தாழையூத்து ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி. இவருடைய மகன் இசக்கி ராஜா என்ற கோஸ்ட் ரைடர் ராஜா (வயது20). இவர் அந்த பகுதியில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். உடனே அவரை மானூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று இசக்கிராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து இசக்கிராஜா குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை மானூர் போலீசார் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

Next Story