தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் 71 பேர் மீது குற்றப்பத்திரிகை


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் 71 பேர் மீது குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 25 March 2021 1:46 AM IST (Updated: 25 March 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் 71 பேர் மீது குற்றப்பத்திரிகை

மதுரை,மார்ச்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கை விசாரிக்கின்றனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முதல்கட்டமாக 27 பேர் மீது கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.
பின்னர் கூடுதலாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மேலும் 44 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 71 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவார். தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story