மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா


மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 25 March 2021 1:59 AM IST (Updated: 25 March 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.


செந்துறை:
நத்தம் அருகே சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி மஞ்சநாயக்கன்பட்டியில் சாமி சிலை செய்வதற்காக பிடிமண் எடுத்து கொடுக்கப்பட்டது. 
அது சிறுகுடி மந்தையில் உள்ள சவுக்கைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அது கிழக்கு தெருவிலுள்ள சவுக்கைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சர்வ அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்
பின்னர் மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு முத்தாலம்மன் நகர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
 பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஆரத்தி, மாவிளக்கு போன்றவை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கிடாவெட்டு நடந்தது.
 பின்னர் மாலையில் அம்மன் பூஞ்சோலை சென்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் காரணக்காரர்கள், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story