மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு + "||" + Grandmother dies after being hit by train

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு
கடையநல்லூர் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
அச்சன்புதூர், மார்ச்:
கடையநல்லூர் அருகே மாவடிக்கால் ெரயில்வே பீடர் ரோட்டில் வசிக்கும் தங்கப்பாண்டி மனைவி முனிஆச்சு (வயது 80). இவர் கடையநல்லூர் ெரயில் நிலையம் அருகே உள்ள புளியமரத்தில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் புளியம்பழங்களை தினசரி எடுப்பது வழக்கம். காது கேட்காத இந்த மூதாட்டி நேற்று காலை ெரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சரக்கு ெரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் ெரயில் நிலைய அலுவலர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயிலில் அடிபட்டு மிளா சாவு
ரெயிலில் அடிபட்டு மிளா பரிதாபமாக இறந்தது.
2. ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.
3. ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
ரெயிலில் அடிபட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார்.