பயன்பாடற்ற கிணறு மூடப்படுமா?
உயிர்பலி நிகழ்வதற்கு முன் பயன்பாடற்ற கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் கிழக்குத்தெரு, முத்தரையர் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு மையப்பகுதியில் 40 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தடுப்புச்சுவர் எதுவும் இல்லாமல் தூர்வாரப்படாமல் உள்ளது. ஆரம்ப காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த இந்த கிணறு தற்போது எந்தவித பயன்பாடு இல்லாமல் போய் விட்டது. மேலும் கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. பயன்பாடற்ற இந்த கிணற்றில் அடிக்கடி இந்த வழியாக செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஆபத்தான, பயன்பாடற்ற இந்த கிணறை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story