மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் சத்திரபட்டி விலக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது போலீசாரை கண்டதும் லாரியில் இருந்த 2 பேர் தப்பியோடினர். லாரியில் இருந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஒ.மேட்டுபட்டியை சேர்ந்த புளுகாண்டி மகன் மகேஸ்வரன் (வயது 28) மற்றும் தப்பி ஓடிய 2 பேரும் சேர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த ேபாலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story