திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய மோப்பநாய்
திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய மோப்பநாய் வாங்கப்பட்டது
திருச்சி,
திருச்சி மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பணிபுரிந்த அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற ‘டைகர்' என்ற துப்பறியும் மோப்பநாய் ஓய்வு பெற்றது. அதற்கு பதிலாக பிறந்து 83 நாளான டாபர்மேன் வகையைச் சேர்ந்த புதிய நாய்க்குட்டி வாங்கப்பட்டது. திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் இந்த நாய்க்குட்டிக்கு காவேரி என பெயர் சூட்டினார். இதற்கு போதைப்பொருட்களை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் பயிற்சியாளராக ஏட்டு எட்வின் அமல்ராஜ் மற்றும் செந்தமிழன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நாய்க்குட்டிக்கு 3 மாதம் அடிப்படை பயிற்சி திருச்சியிலும் அடுத்த 6 மாதம் போதை பொருட்களை கண்டறியும் பயிற்சி கோவை மாநகர துப்பறியும் நாய் பயிற்சி மையத்தில் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story