தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், பணியாளர்கள் இன்று முதல் தபால் வாக்குகளை பதிவு செய்ய திருச்சியில் சிறப்பு மையங்கள்
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், பணியாளர்கள் இன்று முதல் தபால் வாக்குகளை பதிவு செய்ய திருச்சியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள 9 சட்டமன்ற சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் தங்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை பதிவு செய்ய சிறப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த நாட்களில் குறிப்பிட்ட பணியாளர் வாக்குப்பதிவு செய்யலாம் என்றும், அதற்கான மையங்கள் விவரம் வருமாறு:-
25-ந் தேதி (இன்று) மண்டல அலுவலர்கள், அக்கவுண்டிங் குழு, எப்.எஸ்.டி. குழு, எஸ்.எஸ்.டி., வி.எஸ்.டி, வி.வி.டி. குழு, நோடல் அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள். இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்.
27-ந் தேதி: வாக்குச்சாவடி அலுவலர்கள். இடம்: சம்பந்தப்பட்ட 2-வது பயிற்சி மையம்.
29-ந் தேதி: திருச்சி மாநகர போலீசார். இடம்: திருச்சி கலையரங்கம்.
30-ந் தேதி: போலீஸ் அதிகாரிகள் (ஊரக பகுதி). இடம்: திருச்சி கலையரங்கம்.
தபால் வாக்குகளை பதிவு செய்ய வரும் அரசு அலுவலர்கள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன் தவறாமல் முக கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story