மாணவர்களுக்கான அக மதிப்பீட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்


மாணவர்களுக்கான அக மதிப்பீட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 March 2021 3:14 AM IST (Updated: 25 March 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவர்களுக்கான அக மதிப்பீடு பட்டியலை ஏப்ரல் 15-ந் தேதிக்குள் தயார் செய்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர், 
பிளஸ்-2 மாணவர்களுக்கான அக மதிப்பீடு பட்டியலை ஏப்ரல் 15-ந் தேதிக்குள் தயார் செய்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு 
 இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மே 3-ந் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்ரல் 16-ந் தேதி முதல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதுவரை பாடத்திட்டப்படி பாக்கி உள்ள பாடங்களை நேரடி வகுப்புகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் 
 இந்தநிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகளை மாணவர்களிடம் சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
 மாணவர்களின் செயல் முறை விளக்க நோட்டுகள் மற்றும் அவர்களின் ஆய்வக செயல்பாடுகளை வைத்து மதிப்பெண் வழங்குமாறும், அதை அகமதிப்பீடு பட்டியலில் சேர்க்குமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு 
 இந்த மதிப்பெண் பட்டியல் விவரங்களை ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவுகளை முடித்து ஏப்ரல் 28-ந் தேதிக்குள் தேர்வுத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
 இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story