விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 March 2021 3:20 AM IST (Updated: 25 March 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தளவாய்புரம், 
சேத்தூர் பேரூராட்சி மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி சார்பில் சேத்தூர் பஸ் நிலையம் முன்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட நகர்ப்புற மகளிர் வாழ்வாதார இயக்கம் இணை இயக்குனர் தனபதி, உதவி திட்ட அலுவலர் வசுமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக இங்கு விழிப்புணர்வு கோலமிட்டு அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பின்னர் சிலம்பாட்டம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், செட்டியார்பட்டி செயல் அலுவலர் சந்திரகலா, இளநிலை பொறியாளர் கோமதி சங்கர், மகளிர் சுய உதவிக்குழுவினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story